மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற திமுக எம்.பி கனிமொழி

0 2497

திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற நிலையில் வீடு திரும்பி உள்ளார்.

தொடர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னை கீரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், வீடு திரும்பிய கனிமொழி, மருத்துவர்களின் ஆலோசனைப்படி மேலும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார். 5 நாட்கள் அவர் வீட்டுத் தனிமையில் இருப்பார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments