தமிழகத்தில் 4000-த்தை நெருங்குகிறது ஒருநாள் கொரோனா பாதிப்பு

0 2930

தமிழ்நாட்டில், ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 3,986 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகி சிகிச்சை பெற்றவர்களில், 1824 பேர் குணமடைந்து உள்ளதாகவும், சிகிச்சை பலனின்றி, 17 பேர் உயிரிழந்ததாகவும்
தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகரில் 1459 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 390 பேரும், கோவையில் 332 பேரும், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, திருவள்ளூர், திருப்பூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம் மற்றும் திருச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments