வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி... காதலனின் தந்தையை கொலை செய்த காதலி வீட்டார்!

0 17184

சேலம் அருகே காதல் தகராறில், காதலனின் தந்தை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட செங்கான்வளவு பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு. கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியான இவருக்கு சின்னம்மாள் என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இதனிடையே இவரது இரண்டாவது மகன் பிரகாஷும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு,வெளியேறியுள்ளனர்.

தகவலறிந்த சந்தியாவின் உறவினர்கள் தங்கவேல் வீட்டிற்கு சென்று, சந்தியா குறித்து விசாரித்துள்ளனர். அப்போது இரு குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த பெண் வீட்டார், பிரகாஷின் தந்தை தங்கவேலுவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனால் தங்கவேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொங்கணாபுரம் போலீசார், தங்கவேலுவின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments