நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை - சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் விளக்கம்

நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுபாடு எதுவும் இல்லை என சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் விளக்கம் அளித்துள்ளார். தங்களுக்கு தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அவற்றை அனுப்பும்படி மகாராஷ்டிராவும், ஆந்திர பிரதேச அரசும் மத்திய அரசுக்கு அவசர செய்தி அனுப்பின.
இந்த தகவல் ஊடகங்களில் வெளியான நிலையில், டெல்லியில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஹர்ஷ் வர்தன் இந்த 2 மாநிலங்களுக்கும் அவற்றின் தேவைக்கு ஏற்ப தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என உறுதி அளித்தார்.
எந்த மாநிலத்திலும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படாமல் மத்திய அரசு பார்த்துக் கொள்ளும் என்ற அவர், அனைத்து மாநிலங்களுக்கும் தேவைக்கேற்ப அவை அனுப்பி வைக்கப்படுவதாக கூறினார். நேற்று டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தின் போதே மாநிலங்களிடம் இந்த தகவல் பகிரப்பட்டதாவும் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
Comments