பஞ்சாபில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று முதல் ஏப்ரல் இறுதிவரை இரவுநேர ஊரடங்கு அமல்

0 2026

பஞ்சாபில் கொரோனா பரவலைத் தடுக்க ஏப்ரல் இறுதி வரை இரவுநேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் கடந்த இருவாரங்களாக கொரோனா பரவல் தொடர்ந்து  அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க ஏற்கெனவே பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் வருகிற 30ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இரவுநேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைமுறையில் இருக்கும் எனப் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் கடைகள் மூடப்படுவதுடன், இன்றியமையாப் பொருட்கள், சேவைகள் தவிர மற்ற போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏப்ரல் 30 வரை அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments