சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 உயர்வு

0 6673

சென்னையில் ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 608 ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று 4,258 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம் இன்று 76 ரூபாய் அதிகரித்து 4,334 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் நேற்று 34,064 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம், இன்று 608 ரூபாய் அதிகரித்து 34,672 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. நேற்று 69,300 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ வெள்ளி, ஆயிரத்து 600 ரூபாய் விலை அதிகரித்து 70,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments