தேர்தலில் அயராமல் களப்பணியாற்றியவர்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

0 2391

ட்டமன்றத் தேர்தலில் மிகுந்த பொறுப்புடன் அயராமல் களப்பணியாற்றிய திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே நடைபெற்ற ஜனநாயக திருவிழாவில் ஆர்வமுடன் வாக்களித்த வாக்காளர்களுக்கும், பணியாற்றிய தேர்தல் பணியாளர்களுக்கும் பாராட்டுடன் கூடிய நன்றியை தெரிவித்து கொள்வதாக, மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் பணியும், பொறுப்பும் தற்போது இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள மையங்களைக் திமுகவினர் தொய்வின்றி, சுழற்சி முறையில் கண்காணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments