தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மயக்க ஊசி செலுத்தி ஒற்றை காட்டு யானையை பிடித்த வனத்துறையினர்

0 8367
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஏரியூர் அருகே நடமாடிவந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஏரியூர் அருகே நடமாடிவந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

பதனவாடி காப்புக்காட்டையை ஒட்டிய கிராமங்களில் கடந்த வாரமாக சுற்றித்திரிந்த ஒற்றை ஆண் யானை, அப்பகுதியிலுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில், நிகழ்விடத்திற்கு வந்த வனத்துறை மற்றும் மருத்துவ குழுவினர், காலை 8 மணியளவில் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.

சுமார் 20 வயதுடைய அந்த யானை 4 மணிநேரத்திற்கு பின் மயக்கமடைந்ததையடுத்து கிரேன் மற்றும் பொக்லைன் வாகனங்கள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments