9ந் தேதி முதல் 11ந் தேதி வரை தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

0 2097

குமரிக்கடல் பகுதியில் உருவாகவுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் 9 முதல் 11 ஆம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட கால நிலை காணப்படும். நாமக்கல், கரூர் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி உயர்ந்து காணப்படும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை அதிகபட்சம் 35 டிகிரி, குறைந்தது 26 டிகிரி செல்ஷியஸ்  ஆக இருக்கும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments