மளிகைக்கடை பெயரில் ரூ. 2,000 டோக்கன் கொடுத்து அரசியல்வாதிகள் அட்டூழியம்... கடைக்காரர் தப்பி ஓட்டம்!

0 12818
கடையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்ட்ர்

கும்பகோணத்தில் மளிகை கடை பெயரில்  ரூ.2, 000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் வாங்க   போலி டோக்கன் கொடுத்து வாக்காளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது. அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக பணம் பட்டுவாடா ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், ஒரு சில இடங்களில் கட்டுப்பாட்டை மீறி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. பணத்துக்கு பதிலாக டோக்கன் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. 

கும்பகோணம் பெரிய கடைத்தெரு பாட்ராச்சாரியார் தெருவில் பிரியம் மளிகை ஏஜென்சி என்ற கடையில் பொதுமக்கள் சிலர் அந்தக் கடையின் பெயருடன் ரூ.2000 என குறிப்பிடப்பட்டிருந்த டோக்கனை கொண்டு வந்து கொடுத்தனர். அரசியல் கட்சியினர் பணத்திற்கு பதிலாக உங்கள் கடையில் இலவசமாக மளிகை பொருட்கள் வாங்குவதற்காக டோக்கன் கொடுத்துள்ளனர் என்றும் கடை உரிமையாளர் ஷேக் முகமதுவிடத்தில் கூறியுள்ளனர். டோக்கனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஷேக் முகமது, நான் யாருக்கும் டோக்கனுக்கு மளிகை பொருட்கள் வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கவில்லை . தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார். அப்போதுதான் மக்களுக்கு தங்களை போலி டோக்கன் கொடுத்து அரசியல்வாதிகள் ஏமாற்றியுள்ளனர் என்று உரைத்துள்ளது.

கையில் டோக்கனுடன் தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகரிக்கவே ஷேக் முகமது தன் மளிகை கடையை பூட்டி கடையின் கதவில் வேட்பாளர்கள் கொடுத்த டோக்கனுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தங்கள் கடை எந்த பொறுப்பும் ஏற்காது என சிறிய போஸ்டர் அடித்து கதவில் ஒட்டி சென்றுவிட்டார்.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் சேக்முகமது கூறுகையில், அதிமுகவை சேர்ந்த தான் கடந்த 25 வருடமாக இங்க கடை நடத்தி வருகிறேன். யாரோ ஒருவர் வாக்காளர்களுக்கு தன் கடை பெயரில் டோக்கனை கொடுத்துள்ளார் என்று கலக்கத்துடன் தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமை முதல் மக்கள் இதுபோன்று டோக்கனை கொண்டு வருகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பணத்துக்கு வாக்கு போடும் மக்களுக்கு இது தேவைதான் என்று கும்பகோணம் மக்கள் கூறுகிறார்கள். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments