வாக்களித்த தமிழக மக்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்: கமல்ஹாசன்

0 1473

சட்டமன்ற தேர்தலில் தன்னோடு கைகோர்த்து களம்கண்ட கட்சி உறுப்பினர்கள், தோழமை கட்சிகள், நண்பர்கள், சக போட்டியாளர்கள், வாக்காளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருந்தொற்று காலத்திலும் 72 சதவீத வாக்காளர்கள் தங்களது கடமையை ஆற்றியிருப்பது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தை சீரமைப்போம் என்பது வெறும் தேர்தல் கோஷம் அல்ல, கூட்டுக்கனவு என்றும், மண்ணை, மொழியை, மக்களை காக்க இன்று போல் என்றும் களத்தில் நிற்போம் என்றும் கமல்ஹாசன் உறுதியளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments