திருமதி இலங்கை பட்டம் வென்றவருக்கு நேர்ந்த துயரம் : வழங்கிய பட்டத்தை ஒரு சில நிமிடங்களிலேயே பறித்த அமைப்பாளர்கள்.!

0 7892

திருமதி இலங்கை பட்டம் வென்றவரிடமிருந்து ஒரு சில நிமிடங்களிலேயே அந்த பட்டம் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை பட்டம் புஷ்பிகா டி சில்வா என்பவருக்கு வழங்கப்பட்டது.

மகிழ்ச்சியாக கிரீடத்தை சூடிய புஷ்பிகாவுக்கு அந்த சந்தோஷம் சில நிமிடம்கூட நீடிக்கவில்லை. புஷ்பிகா விவாகரத்து பெற்றவர் என்பதால் அவர் இப்பட்டத்தை பெற தகுதியில்லை என்று கூறி கடந்த முறை பட்டம் வென்ற கரோலின் பட்டத்தை பறித்தார். இதனையடுத்து திருமதி இலங்கை பட்டம் இரண்டாம் இடம் பிடித்தவருக்கு வழங்கப்பட்டது.

கிரீடத்தை வேகமாக எடுத்ததால், புஷ்பிகா தலையில் காயம் ஏற்பட்டது. விசாரணையில் புஷ்பிகா தனது கணவரை பிரிந்து வாழ்வது உண்மைதான் ஆனால் விவாகரத்து ஆகவில்லை என்பது தெரிந்ததையடுத்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி புஷ்பிகாவுக்கே அந்த பட்டம் திரும்ப வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments