நடிகர் சரத்குமார் - நடிகை ராதிகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்

0 99487

காசோலை மோசடி வழக்கில் சரத்குமார், ராதிகா, தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருக்குச் சென்னை சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

ராதிகாவும் சரத்குமாரும் ரேடியன்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வழங்கிய காசோலைகள் வங்கிக் கணக்கில் பணமின்றித் திரும்பின. இதையடுத்து ராதிகா, சரத்குமார், தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகிய மூவருக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரேடியன்ஸ் நிறுவனம் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அலிசியா, மூவருக்கும் ஓராண்டு சிறைத் தண்டனையும், 3 கோடியே 30 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தார். மேல்முறையீடு செய்ய உள்ளதாக் கூறிய மனுவை விசாரித்த நீதிபதி 30 நாட்களுக்குத் தண்டனையை நிறுத்தி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments