கடத்தப்பட்ட பாதுகாப்பு படை வீரரை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அரசுக்கு மாவோயிஸ்ட்டுகள் மிரட்டல்

0 1039

ங்களிடம் பிணையக் கைதியாக இருக்கும் கமாண்டோ வீரரை விடுவிக்க வேண்டும் என்றால் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மாவோயிஸ்ட்டுகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

சத்திஷ்கரில் கடந்த 3 ஆம் தேதி மாவோயிஸ்ட் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையிலான மோதலில், வீரர்கள் 22 பேர் உயிர் தியாகம் செய்தனர். கமாண்டோ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் கோப்ரா கமாண்டோ வீரரான ராகேஷ்வர் சிங் தங்களிடம் சிறை கைதியாக இருப்பதாகவும், அவரை விடுவிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தர்களை அரசு நியமிக்க வேண்டும் என்று மாவோயிஸ்ட் செய்தி தொடர்பாளர் விகல்ப் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படையினருடனான மோதலில் தங்களது தரப்பில் பெண் உள்பட 5 பேர் இறந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments