உக்கிரம் காட்டும் கொரோனா.. தினசரி பாதிப்பு 1.15 லட்சம்..!

0 3283
நாட்டில் கொரோனா தொற்று பரவத் துவங்கிய கடந்த 14 மாதங்களில் அதன் தினசரி எண்ணிக்கை ஒரு லட்சத்து 15 ஆயிரம் என்ற உச்ச எண்ணிக்கையை தாண்டியுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று பரவத் துவங்கிய கடந்த 14 மாதங்களில் அதன் தினசரி எண்ணிக்கை ஒரு லட்சத்து 15 ஆயிரம் என்ற உச்ச எண்ணிக்கையை தாண்டியுள்ளது.

நாட்டில் முதலாவது கொரோனா தொற்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உறுதியானது. அதன்பின்னர் அதிகரிக்க துவங்கிய தொற்று எண்ணிக்கை கடந்தாண்டு இறுதியில் மெல்ல மெல்ல குறையத் துவங்கியது.

தடுப்பூசி வந்து விட்டதால் கொரோனாவின் பரவல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 3 நாட்களில் 2 ஆவது முறையாக தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து அதிர்ச்சி அளித்துள்ளது.

சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 736 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 558 ஆக இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 630 பேர் உயிரிழந்தனர்.

8 லட்சத்து 43 ஆயிரத்து 473 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை  8 கோடியே 70லட்சத்து 77 ஆயிரத்து 474 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்த்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments