கொரோனாவில் இருந்து 2-வது முறையாக குணமடைந்த 104 வயது மூதாட்டி

கொலம்பியாவில் 104 வயது மூதாட்டி 2-வது முறையாக கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளார்.
கொலம்பியாவில் 104 வயது மூதாட்டி 2-வது முறையாக கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளார்.
கார்மென் ஹெர்னாண்டெஸ் (Carmen Hernandez) என்ற 104 வயது மூதாட்டி ஏற்கனவே கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில் மீண்டும் தொற்றுக்குள்ளானார்.
இதையடுத்து 21 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன மூதாட்டிக்கு இருபுறமும் நின்று கைகளைத் தட்டி மருத்துவ ஊழியர்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.
Comments