பிரேசிலில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 4,195 பேர் உயிரிழப்பு

0 2199
பிரேசிலில் கொரோனா பெருந்தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 195 பேர் உயிரிழந்தனர்.

பிரேசில் நாட்டில் ஒரே நாளில் கொரோனாவிற்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

பிரேசிலில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதையடுத்து, மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டோரின் கூட்டம் அலைமோதுகிறது. இதுவரை 1 கோடியே 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4 ஆயிரத்து 195 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக அங்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 37 ஆயிரமாக அதிகரித்துள்ளது. பிரேசிலில் இதுவரை 92  கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments