சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் இந்தியாவும் கைகோர்க்க அமெரிக்கா அழைப்பு

உலகின் இருபெரும் ஜனநாயக நாடுகளான இந்தியாவும் அமெரிக்காவும் சுற்றுச்சூழல் சவால்களை இணைந்து சந்திக்க வேண்டும் என்று அமெரிக்க சுற்றுச்சூழல் சிறப்புத் தூதரான ஜான் கெர்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் உறுதியான நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் தொழில்நுட்ப உதவிகள் கிடைக்கும் என்று சுட்டிக்காட்டிய அவர் இதனால் வரும் தலைமுறைகளுக்கு சிறந்த மாற்று ஏற்பாடாக இருக்கும் என்று கூறினார்.
தெற்கு ஆசிய பெண்களின் பங்களிப்பு குறித்த மாநாட்டில் உரைநிகழ்த்திய அவர், முன்னதாக தமது டெல்லி பயணத்தின் போது மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
வரும் 23, மற்றும் 24 தேதிகளில் காணொலி வாயிலாக நடைபெறும் சுற்றுச்சூழல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக இந்தியா வந்துள்ள அதிபரின் சிறப்புத்தூதர் ஜான் கெர்ரி நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
Comments