கர்நாடகாவில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

கர்நாடகாவில் சம்பள உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவில் சம்பள உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
அரசு போக்குவரத்து ஊழியர்கள் தங்களுக்கு 6-வது ஊதிய குழு பரிந்துரையின்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும்,அரசு ஊழியர்களாக கருத வேண்டும் என்பன உள்பட 10 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களின் 9 கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறிய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இதனை உடனடியாக நிறைவேற்றக் கோரி இன்று முதல் கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
Comments