தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..!

0 3024
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

குமரிக்கடல் பரப்பில் நிலவும் வளிமண்டல சுழற்சியாலும், உள் கர்நாடகம் வரை காணப்படும் காற்றழுத்த தாழ்வு காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 9,10 ஆம் தேதிகளில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி மாவட்டங்களில் இன்று இயல்பை விட 5 டிகிரி பாரன்ஹீட் வரை பகல் நேர வெப்பநிலை அதிகரிக்க கூடுமென்றும், பிற மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்கக் கூடுமென கூறப்பட்டுள்ளது. .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments