மாஸ்க்கை முறையாக அணியாத ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய போலீசார்

0 1643
மத்தியப் பிரதேசத்தில் மாஸ்க்கை முறையாக அணியாத இளைஞரை, மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் போலீசார் சரமாரியாக தாக்கியுள்ளனர்‍.

மத்தியப் பிரதேசத்தில் மாஸ்க்கை முறையாக அணியாத இளைஞரை, மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் போலீசார் சரமாரியாக தாக்கியுள்ளனர்‍.

இந்தூரைச் சேர்ந்த கிருஷ்ணா கேயர்(Krishna Keyer) என்ற ஆட்டோ ஒட்டுநர்,உடல்நலம் குன்றிய தனது தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அவர் அணிந்திருந்த மாஸ்க், மூக்கிலிருந்து நழுவியிருக்கிறது.

மாஸ்க்கை முறையாக அணியாததைக் கண்ட, அங்கிருந்த போலீசார், அவரை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துள்ளனர்‍. அதற்கு அவர் மறுப்புத் தெரிவிக்க, ஆத்திரமடைந்த போலீசார், அவரை சாலையில் அடித்து உதைத்துள்ளனர்‍.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து,இளைஞரைத் தாக்கிய அந்த இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments