செல்பி புள்ளையிடம் அஜீத் செல்லை பறிக்க இது தான் காரணம்..! தல மேல தப்பில்லப்பா..!

0 265622
செல்பி புள்ளையிடம் அஜீத் செல்லை பறிக்க இது தான் காரணம்..! தல மேல தப்பில்லப்பா..!

திருவான்மியூரில் வாக்குபதிவு மையத்தில் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை அஜீத் பறித்து பின்னர் திருப்பி கொடுத்தார். ஜாம்பிக்கள் போன்ற வெறித்தனமான ரசிகர்களால் அஜீத் பொறுமை இழந்த சம்பவத்தின் நிஜ பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

திருவான்மியூரில் உள்ள வாக்கு சாவடியில் தனது மனைவி ஷாலினியுடன் வாக்களிக்க சென்ற அஜீத்குமார் வாக்குபதிவு தொடங்குவதற்கு 20 நிமிடத்திற்கு முன்பாகவே சென்று வாக்குச்சாவடிக்கு வெளியே வரிசையில் நின்றார். அப்போது அங்கு குவிந்த ரசிகர்கள் அஜீத் மற்றும் ஷாலினியுடன் செல்பி எடுக்க முண்டியடித்தனர்.

அதில் வெள்ளை சாட்டை போட்ட செல்பி புள்ள ஒன்று ஷாலினியுடன் செல்பி எடுப்பதில் அதீத ஆர்வம் காட்டியது

அதன் பின்னர் கூட்டம் அதிகரிப்பதை உணர்ந்து போலீசார் அஜீத் மற்றும் ஷாலினியை பத்திரமாக வாக்கு பதிவு மையத்திற்குள் அழைத்துச்சென்றதும். அடங்காத அந்த செல்பிபுள்ள, அஜீத்தை சுற்றி சுற்றி படம் எடுத்தது, அப்போதும் அஜீத் பொறுமை காத்தார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு அஜீத் குனிந்து கையுறை அணிந்து கொண்டிருந்த போது, வெள்ளைச்சட்டை செல்பி புள்ள மீண்டும் அஜீத்துடன் செல்பி எடுப்பதற்கு தக்க கோணம் பார்த்தது.

அஜீத் தனது செல்போனை பார்க்க வேண்டும் என்பதற்காக அவரது இடுப்பில் கைவத்து இழுத்ததால், சற்று ஆவேசமான அஜீத் அந்த செல்பி புள்ளையின் செல்போனை வெடுக்கென்று மறித்துப் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது

அதனை தொடர்ந்து அஜீத் வாக்களிக்க சென்ற நிலையில், நமது செல்போன் வருமா ? வராதா? ஒரு வேளை போலீசில் ஒப்படைத்து விடுவாரோ ? என்ற பதை பதைப்புடன் அந்த இளைஞர் தவித்து காத்து நிற்க , அத்தனை பேரிலும் அவரை சரியாக அடையாளம் கண்டு அழைத்து, பறித்த செல்போனை கையில் கொடுத்து அன்பாக எச்சரித்து விட்டு தான், வாக்களிக்கவே சென்றிருக்கிறார் நடிகர் அஜீத்

இவற்றிற்கெல்லாம் மேல், கூட்டத்தில் சிக்கி கேமராவுடன் தள்ளாடிய சில ஒளிப்பதிவாளர்களை கையில் வைத்திருக்கின்ற பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள், கூட்டத்தில் கவனமாக கேமராவை கையாளுங்கள் என்று பாசத்துடன் அறிவுறுத்திச் சென்றிக்கிறார் தல..!

இதே போல் தான் நடிகர் விஜய்யிடமும் அவரை பிடித்து இழுத்து ரசிகர்கள் அளவுக்கதிகமாக ஜாம்பிக்கள் போல எல்லைமீறினர். வாகனத்தில் செல்லும் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்திருந்தால் யார் பொறுப்பு..! அஜீத், மற்றும் விஜய் ரசிகர்கள் சிந்திக்க வேண்டும் பொறுமையே பெருமை சேர்க்கும்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments