தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: பல அடுக்கு பாதுகாப்பில் வாக்கு எந்திரங்கள்

0 2040

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகள் பதிவான எந்திரங்கள், 75 வாக்கு எண்ணும் மையங்களில், பல அடுக்கு பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பதிவான வாக்குகள் வருகிற மே 2ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்கள், அந்த மாவட்டங்களின், வாக்கு எண்ணிக்கை மையங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வாக்குகள் பதிவாகியுள்ள எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டிருக்கும். இதனைச் சுற்றி, மூன்று அடுக்குகளாக, துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். தமிழ்நாடு காவல்துறையினரும், 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியை மேற்கொள்வார்கள். வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை உட்பட, அனைத்து இடங்களும், இரவிலும் கண்காணிக்கவல்ல திறனுடைய சிசிடிவி காமிராக்களை கொண்டு கண்காணிக்கப்படும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments