அசாமில் 3வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நிறைவு

0 1373

சாமில் 3வது மற்றும் இறுதி கட்டமாக 40 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் அமைதியாக நடைபெற்றது. முதியவர்கள் உள்பட ஏராளமான வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையாற்றினர்.

அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் வாக்களித்தனர். மாலை 6 மணி நிலவரப்படி 78.94 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

அதே போன்று மேற்குவங்கத்தில் 3வது கட்டமாக 31 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் 77.68 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் இன்னும் 5 கட்ட வாக்குப்பதிவுகள் எஞ்சியிருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments