சென்னையில் வாக்களிக்க வந்த பெண்ணின் பெயர் பட்டியலில் இறந்துவிட்டதாக இருந்ததால் பரபரப்பு!

0 2208

சென்னை சாலிகிராமத்தில் வாக்களிக்க வந்த பெண்ணின் பெயர் வாக்காளர் பட்டியலில் இறந்துவிட்டதாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தம்பா தெருவை சேர்ந்த விஜயா,வாக்களிப்பதற்காக காவேரி உயர்நிலை பள்ளிக்கு சென்றுள்ளார். வாக்குச்சாவடியிலிருந்த அதிகாரிகள் வாக்காளர் பட்டியலில் விஜயா என்பவர் இறந்தவிட்டார் என குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த விஜயா, உயிரிழந்த தனது கணவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதாகவும், உயிருடன் இருக்கும் தன்னுடைய பெயர் பட்டியலில் இல்லை என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments