அதிமுக எம்.பி.ரவிந்தரநாத் கார் மீது கற்கள் வீச்சு... தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி அதிமுகவினர் மறியல்

0 4282
அதிமுக எம்.பி.ரவிந்தரநாத் கார் மீது கற்கள் வீச்சு

தேனி மாவட்டம் போடியில் மக்களவை உறுப்பினர் ரவிந்தரநாத்தின் கார் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியகுளத்தில் வாக்களித்த மக்களவை உறுப்பினர் ரவிந்தரநாத்,  போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  வாக்குச் சாவடிகளை பார்வையிட்டார். இதனையடுத்து, பெருமாள்கவுண்டர்பட்டியில்  சென்று கொண்டிருந்த அவரது கார் மற்றும் உடன் சென்ற மற்றொரு கார் மீதும் மதுபோதையில் இருந்த மர்மநபர்கள் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தினர்.

இதனையறிந்து அங்கு குவிந்த அதிமுக ஆதரவாளர்கள், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments