தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

0 1307
தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் உள் கர்நாடகா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி, நெல்லை, கோவை, தென்காசி மற்றும் நீலகிரியில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் வறண்ட காலநிலை நிலவும். 7, 8ஆம் தேதிகளில் மாநிலத்தில் வறண்ட கால நிலையும், 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும்.

தமிழகத்தில் வெப்பத்தின் அளவு குறைந்துள்ளது. எந்த பகுதியிலும் அனல்காற்று வீசாது. கடலோர மாவட்டங்களில் இயல்பான வெப்ப நிலையும், உள்மாவட்டங்களில் அது சற்று அதிகரித்தும் காணப்படும். காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல்லில் 2 செ.மீ.மழை பதிவானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments