இறுதி மூச்சிலும் ஜனநாயக கடமை... வாக்குச்சாவடியில் உயிரிழந்த முதியவர்!

0 8298
அர்ஜுனன்

பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடியில் வாக்களித்து விட்டு வெளியே வந்த நெசவு  தொழிலாளி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அய்யம்பேட்டை அக்ரஹாரத்தில் உள்ள ஸ்டார் லைன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் காலை 7 மணி முதல்  பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். இங்கு, ஓட்டு போடுவதற்காக சென்ற அய்யம்பேட்டையை சேர்ந்த சேர்ந்த அர்ஜுனன் (வயது 62 ) என்ற முதியவர் வரிசையில் காத்திருந்தார். பின்னர், வாக்குசாவடிக்குள் சென்று வாக்களித்து விட்டு வெளியே வந்த அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அர்ஜுனனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் அவருக்கு நெஞ்சு வலி மற்றும் லோ பிரஷர் இருந்தததும் தெரிய வந்தது. இறந்த முதியவர் அர்ஜுனன் நெசவு தொழிலாளியாவார். இவருக்கு மனைவி மற்றும் மகன் மற்றும் மகள் உள்ளனர். தன்னுடைய இறுதி மூச்சிலும் ஜனநாயக கடமையாற்றி சென்றுள்ளதாக அந்த பகுதி மக்கள் சோகத்துடன் கூறினார்கள். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments