கொரோனா பரவல் எதிரொலி : டெல்லியில் இரவு ஊரடங்கு அமல்..!

0 1666
டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

உடனடியாக அமலுக்கு வரும் இந்த இரவு ஊரடங்கு உத்தரவு, ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. இதுவரை ஊரடங்கை அமல்படுத்த திட்டமிடவில்லை என்று கடந்த வெள்ளிக்கிழமை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

திங்களன்று டெல்லியில் புதிதாக 3548 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதுடன் 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments