கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா என கமல் புகார்..!

0 4717

கோவை தெற்கு தொகுதியில் டோக்கன்கள் மூலம் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், டோக்கன்கள் யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

முன்னதாக கெம்பட்டி காலனியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்குப்பதிவை கமல் பார்வையிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments