இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 96,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: சுகாதார அமைச்சகம் தகவல்

0 1264
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 96,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: சுகாதார அமைச்சகம் தகவல்

டந்த 24 மணி நேரத்தில் 96 ஆயிரத்து 982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது.

சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி 24 மணி நேரத்தில் 446 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 7 லட்சத்து 88 ஆயிரத்து 223 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 8 கோடியே 31 லட்சத்து 10 ஆயிரத்து 926 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 47 ஆயிரத்து 288 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டது.

25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதிக்குமாறு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments