கொரோனா பரவல் எதிரொலி..! அனைத்து வகையான உள்நாட்டு பேட்மிண்டன் போட்டிகளும் ரத்து செய்யப்படுவதாக இந்திய பேட்மிண்டன் சங்கம் அறிவிப்பு

0 1138
கொரோனா பரவல் எதிரொலி..! அனைத்து வகையான உள்நாட்டு பேட்மிண்டன் போட்டிகளும் ரத்து செய்யப்படுவதாக இந்திய பேட்மிண்டன் சங்கம் அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் காரணத்தால், அனைத்து வகையான பேட்மிண்டன் போட்டிகளும் ரத்து செய்வதாக இந்திய பேட்மிண்டன் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனால், ஏப்ரல் 18 முதல் 25 ம் தேதி வரை பெங்களூரில் நடைபெற இருந்த போட்டிகளும், ஹைதராபாத்தில் நடைபெற இருந்த ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் போட்டிகள் உட்பட அனைத்து வகையான உள்நாட்டு போட்டிகளையும் ரத்து செய்வதாக பேட்மிண்டன் சங்கம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments