வாக்கு செலுத்திய அரசியல் தலைவர்கள்..!

0 4939
வாக்கு செலுத்திய அரசியல் தலைவர்கள்..!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள், தாங்கள் சார்ந்த தொகுதிகளில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குகளை செலுத்தினர். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்

சிலுவம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை தேனாம்பேட்டையில் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்

மனைவி துர்கா, மகன் உதயநிதியுடன் வந்து மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்

நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார் மு.க.ஸ்டாலின்

image

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்துடன் வாக்களிப்பு

பெரியகுளத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்துடன் வாக்களிப்பு

ஓபிஎஸ் உடன் தேனி எம்.பி. ரவீந்திரநாத்தும் தனது வாக்கை பதிவு செய்தார் 

image

சென்னை ஆழ்வார்பேட்டையில் மநீம தலைவர் கமல் வாக்களித்தார்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் தனது வாக்கைச் செலுத்தினார். ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில், சென்னை உயர்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்சராவுடன் வந்து அவர், தனது வாக்கைச் செலுத்தினார். 

image

திண்டிவனம் மரகதாம்பிகை பள்ளியில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாக்கு செலுத்தினார்

பாமக நிறுவனர் ராமதாஸ், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதியில் வாக்கு செலுத்தினார். திண்டிவனம் மரகதாம்பிகை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ராமதாஸ் தனது வாக்கைச் செலுத்தினார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்களித்தார்

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, தனது வாக்கைச் செலுத்தினார். சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் அமைச்சர் தனது வாக்கைச் செலுத்தினார்.

image

சென்னை விருகம்பாக்கத்தில் தமிழிசை சவுந்திரராஜன் வாக்களித்தார்

தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி பொறுப்பு ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், சென்னை வந்து தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை விருகம்பாக்கம் தொகுதியிலுள்ள சாலிகிராமம் கிளாரன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு வந்த அவர், சுமார் அரை மணி நேரம் வரிசையில் நின்று தனது வாக்கைச் செலுத்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். 

image

விருகம்பாக்கம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் வாக்களித்தார்  

தேமுதிக பொருளாளரும் விருத்தாசலம் தொகுதி வேட்பாளருமான  பிரேமலதா விஜயகாந்த், சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் தனது வாக்கைச் செலுத்தினார். சாலிகிராமம் காவேரி உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் அவர் தனது வாக்கை செலுத்தினார். தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் மட்டுமின்றி தங்களது கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்றார்.

image

ஓரடியம்புலம் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்களித்தார்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான ஓ.எஸ். மணியன் வாக்களித்தார். ஓரடியம்புலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மாஸ்க் மற்றும் கையுறை அணிந்து வரிசையில் நின்று தனது வாக்கை அவர் செலுத்தினார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்கு செலுத்தினார் டி.ராஜேந்தர்

இயக்குநர் டி.ராஜேந்தர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார். ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட தி.நகர் இந்தி பிரச்சார சபாவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் டி.ராஜேந்தர் ஓட்டுப் போட்டார்.

விருகம்பாக்கம் தொகுதியில் வாக்கு செலுத்தினார் விஜயபிரபாகரன்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் வாக்கு செலுத்தினார். சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட காவேரி உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது சகோதரன் சண்முகபாண்டியனுடன் வந்து வாக்களித்தார்.

மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான ஜெயக்குமார் தனது வாக்கினை செலுத்தினார். மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட மந்தவெளி சைத்தண்யா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

விருகம்பாக்கம் தொகுதியில் வாக்களித்தார் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சினேகன்

சென்னை விருகம்பாக்கம் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரும், பாடலாசிரியருமான சினேகன், சாலிகிராமத்தில் தனது வாக்கினை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், யார் மீதோ இருக்கும் வெறுப்பில் வாக்களிக்காமல் இருந்துவிடாதீர்கள் என கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments