வாக்கு செலுத்திய திரைபிரபலங்கள்..!

0 9494
வாக்கு செலுத்திய திரைபிரபலங்கள்..!

நடிகர் விஜய் வாக்களிக்க சைக்கிளில் வருகை

தனது வீட்டில் இருந்து வாக்களிக்க விஜய் சைக்கிளில் வருகை

வாக்குச்சாவடிக்கு நடிகர் விஜய் சைக்கிளில் வருகை தந்தார்

சென்னையில் சைக்கிள் ஓட்டி வந்து வாக்களித்தார் நடிகர் விஜய்

image

வீட்டில் இருந்து சைக்கிள் ஓட்டி வந்து வாக்களித்தார் நடிகர் விஜய்

தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடி வரை சைக்கிளில் வந்தார் விஜய்

வாக்களித்துவிட்டு ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டார் விஜய்

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் ரஜினிகாந்த் வாக்களித்தார்

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் வாக்கு செலுத்தினார்

ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்

image

சென்னை ஆழ்வார்பேட்டையில் மநீம தலைவர் கமல் வாக்களித்தார்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தார்

சென்னை உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்

மகள்கள் ஸ்ருதி, அக்சராவுடன் வாக்களிக்க கமல்ஹாசன் வருகை

image

சென்னை திருவான்மியூரில் நடிகர் அஜித் வாக்களித்தார்

சென்னை திருவான்மியூரில் திரைப்பட நடிகர் அஜித் வாக்கு செலுத்தினார்

வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட திருவான்மியூரில் அஜித் வாக்கு செலுத்தினார்

குப்பம் கடற்கரைச் சாலையில் உள்ள வாக்கு பதிவு மையத்தில் வாக்களித்தார்

image

20 நிமிடங்களுக்கு முன்னதாகவே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்

மனைவி ஷாலினியுடன் வந்து நடிகர் அஜித் வாக்களித்தார்

பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்

நடிகர்கள் சூர்யா, கார்த்தி தந்தை சிவக்குமாருடன் வாக்கு செலுத்தினர்

image

திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் வாக்களித்தார்

image 

அரை கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்து வாக்கு செலுத்தினார் நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம் வாக்களிக்க வந்த போது, திடீரென வாக்கு இயந்திரம் பழுதானதால், அரை மணி நேரம் காத்திருந்து வாக்களித்தார். வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட பெசண்ட் நகரிலுள்ள வாக்குச்சாவடிக்கு தனது வீட்டில் இருந்து நடந்தே வந்த நடிகர் விக்ரமை, காவல்துறையினர் உள்ளே அழைத்துச் சென்றனர். இருப்பினும் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால், அவர் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அரைமணி நேரத்திற்கு பிறகு வாக்கு பதிவு இயந்திரம் சரி செய்யப்பட்டு, நடிகர் விக்ரம் வாக்களித்துவிட்டு வீட்டுக்கு காரில் புறப்பட்டார்.

நடிகர் சிவகார்த்திகேயன் மனைவியுடன் வந்து வாக்கு செலுத்தினார்

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட வளசரவாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வந்து வாக்கு செலுத்தினார். 

ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்கு செலுத்தினார் நடிகர் ஜீவா

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட தியாகராயர் நகர் இந்தி பிரச்சார சபாவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ஜீவா தனது வாக்கினை பதிவு செய்தார்.

நடிகர் சத்யராஜ் தனது மகன் சிபிராஜுடன் வந்து வாக்கு செலுத்தினார்

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகர் சத்யராஜ், தனது மகன் சிபிராஜுடன் வந்து வாக்கு செலுத்தினார். இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் நடிகர் சத்யராஜ் மற்றும் அவரது மகன் நடிகர் சிபிராஜ் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர்.

நடிகர் பிரபு குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்

நடிகர் பிரபு, மனைவி மற்றும் மகன் விக்ரம் பிரபுவுடன் வந்து வாக்கு செலுத்தினார். ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் நடிகர் பிரபு வாக்கு செலுத்தினார். 

நகைச்சுவை நடிகர் வையாபுரி மதுரவாயல் தொகுதியில் வாக்களித்தார்

மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட வளசரவாக்கம் வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நகைச்சுவை நடிகர் வையாபுரி வாக்களித்தார்

நடிகை நமீதா ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்கு செலுத்தினார்

நடிகை நமீதா தனது கணவருடன் ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட வள்ளுவர் கோட்டம் அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்.

திரைப்பட நடிகர் விவேக் வாக்கு செலுத்தினார்

திரைப்பட நடிகர் விவேக், சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் வாக்குச் செலுத்தினார். சாலிகிராமத்திலுள்ள ஜெயகோபால் கரோடியா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் விவேக் தனது வாக்கினை பதிவு செய்தார். 

இயக்குநர் பாரதிராஜா வாக்கு செலுத்தினார்

இயக்குநர் பாரதிராஜா தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார். ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் பாரதிராஜா ஓட்டுப் போட்டார். 

விருகம்பாக்கம் தொகுதியில் வாக்களித்தார் நகைச்சுவை நடிகர் செந்தில்

நகைச்சுவை நடிகர் செந்தில், சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வாக்களித்தார். சாலிகிராமம் பகுதியில் உள்ள ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று நடிகர் செந்தில் வாக்களித்தார்.

விருகம்பாக்கம் தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட சாலிகிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வாக்களித்தார் நகைச்சுவை நடிகர் யோகிபாபு 

நகைச்சுவை நடிகர் யோகிபாபு, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோட்டக்காரத் தெரு பி.எஸ்.ஐ. தொடக்க பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்

தியாகராய நகர் தொகுதியில் வாக்களித்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னை தியாகராய நகர் தொகுதியில் வாக்கு செலுத்தினார். வெங்கட் நாராயணா சாலையிலுள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாக்களித்தார்.

விருகம்பாக்கம் தொகுதியில் பாடலாசிரியர் சினேகன் வாக்கு செலுத்தினார்

சென்னை விருகம்பாக்கம் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரும், பாடலாசிரியருமான சினேகன், சாலிகிராமத்தில் தனது வாக்கினை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், யார் மீதோ இருக்கும் வெறுப்பில் வாக்களிக்காமல் இருந்துவிடாதீர்கள் என கேட்டுக்கொண்டார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகர் ஆனந்த்ராஜ் வாக்களித்தார்

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் லேக் எரியா பள்ளியில் நடிகர் ஆனந்த்ராஜ் வாக்களித்தார்.

 ஜனநாயக கடமை ஆற்றினார் நடிகர் விஜய் சேதுபதி

சென்னை தியாகராய நகர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கோடம்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளியில் நடிகர் விஜய் சேதுபதி வாக்களித்தார்.

நடிகை த்ரிஷா மயிலாப்பூர் தொகுதியில் வாக்களித்தார்

சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட டி.டி.கே. சாலையிலுள்ள புனித பிரான்ஸிஸ் சேவியர் நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடிகை த்ரிஷா வாக்களித்தார். 

image

மயிலாப்பூர் தொகுதியில் நடிகர் ஜெயம் ரவி வாக்களித்தார்

சென்னை மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலை பள்ளியில் நடிகர் ஜெயம் ரவி தனது வாக்கினை செலுத்தினர்.  

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் நடிகர் சித்தார்த் வாக்கு செலுத்தினார்

திரைப்பட நடிகர் சித்தார்த் மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்பேட்டையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.

அங்காடித்தெரு நடிகை சிந்து சென்னையில் வாக்களித்தார்

புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அங்காடித் தெரு நடிகை சிந்து, வரிசையில் நின்று வாக்களித்தார். சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட சாலிகிராமம் காவேரி பள்ளி வாக்குச்சாவடியில், அவர் தமது வாக்கை பதிவு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நல்லவர்கள் யாரென தேர்வு செய்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

நடிகை ஆண்ட்ரியா அண்ணா நகர் தொகுதியில் வாக்கு செலுத்தினார்

நடிகை ஆண்ட்ரியா வாக்கு செலுத்தினார். அண்ணா நகர் தொகுதிக்கு உட்பட்ட கீழ்பாக்கத்திலுள்ள சிகா பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஆண்ட்ரியா தனது வாக்கினை பதிவு செய்தார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகர் சிலம்பரசன் வாக்களித்தார்

திரைப்பட நடிகர் சிலம்பரசன் சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார். தி.நகர் இந்தி பிரச்சார சபாவில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிக்கு வந்த அவர் தமது வாக்கை பதிவு செய்தார்.

image

 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments