6 மில்லியன் இந்தியர்கள் உட்பட உலகளவில் சுமார் 533 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருட்டு ?

0 1807
6 மில்லியன் இந்தியர்கள் உட்பட உலகளவில் சுமார் 533 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருட்டு ?

6 மில்லியன் இந்தியர்கள் உட்பட உலகளவில் சுமார் 533 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் ஹேக்கர்களின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ஹட்சன் ராகின் நிறுவனர் அலோன் கால் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பேஸ்புக் பயனர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தகவல் வெளியாகியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

அதன்படி இந்தியாவில் இருந்து 6 மில்லியன் பயனர்களும், அமெரிக்காவில் 32 மில்லியனும், இங்கிலாந்திலிருந்து 11 மில்லியன் மற்றும் ஆஸ்திரேலியாவின் 7 மில்லியன் பயனர்கள் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், 2019 ஆம் ஆண்டே இந்த தகவல் புகாரளிக்கப்பட்டது என்றும், இதனை 2019 ஆண்டே கண்டறிந்து சரிசெய்தாகக் கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments