தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!

0 4883

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தொடங்கியது வாக்குப்பதிவு

மாலை 7 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது

பல தொகுதிகளில் அதிகாலையில் இருந்தே வாக்காளர்கள் வாக்களிக்க காத்திருப்பு

234 தொகுதிகளில் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் போட்டி

வாக்குகளை செலுத்துவதற்காக 88,937 வாக்குப்பதிவு மையங்கள் அமைப்பு

தமிழகத்தில் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் உள்ளனர்

வாக்காளர்களில் 3,09,23,651 பேர் ஆண்கள்- 3,19,39,112 பேர் பெண்கள்- 7,192 பேர் மூன்றாம் பாலினத்தவர்

1,29,165 வாக்களிக்கும் எந்திரங்களும், 91,180 கட்டுப்பாட்டு எந்திரங்களும் தயார்

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் 1.58 லட்சம் போலீசார் பாதுகாப்பு

537 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை- 10,813 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை- தேர்தல் ஆணையம்

மாநில அளவில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு மையம் அமைப்பு

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க வாக்குச்சாவடிகளில் கூடுதல் ஏற்பாடுகள்

வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்துதான் வரவேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு

வாக்காளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு சானிடைசர்கள் வழங்கப்படும்

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு ஒருமுறை பயன்படுத்தும் கையுறை வழங்கப்படும்

12 வகையான ஆவணங்களைப் பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கொரோனா நோயாளிகள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை பிபிஇ உடை அணிந்து வாக்களிக்க அனுமதி

98.5 பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்பநிலை இருக்கும் வாக்காளர்களுக்கு தனி டோக்கன் வழங்கப்படும்- தேர்தல் ஆணையம்

வெப்பநிலை அதிகமாக உள்ள வாக்காளர்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை பாதுகாப்பு உபகரணங்களுடன் வாக்களிக்க அனுமதி

அனுமதிக்கப்பட்ட ஆவணங்கள்- வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட்

அனுமதிக்கப்பட்ட ஆவணங்கள்- புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு

அனுமதிக்கப்பட்ட ஆவணங்கள்- வங்கி அல்லது தபால்நிலையங்களில் வழங்கப்பட்ட கணக்குப் புத்தகம்

அனுமதிக்கப்பட்ட ஆவணங்கள்- ஊரக வேலை உறுதித் திட்ட பணி அட்டை

அனுமதிக்கப்பட்ட ஆவணங்கள்- எம்எல்ஏ, எம்பி ஆகியோருக்கு வழங்கப்படும் அட்டை, மத்திய-மாநில அரசு நிறுவனங்கள் வழங்கும் அட்டை

அனுமதிக்கப்பட்ட ஆவணங்கள்- மருத்துவ காப்பீடு அடையாள அட்டை, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு அட்டை

 தமிழகம் முழுவதும் காலை 9 மணி நிலவரப்படி 13.8 சதவீத வாக்குகள் பதிவு

காலை 9 மணி நிலவரப்படி திண்டுக்கல்லில் அதிக அளவு வாக்குகள் பதிவு

சென்னையில் காலை 9மணி நிலவரப்படி 10.58 சதவீத வாக்குகள் பதிவு

சென்னையில் அதிமுகவினர் டோக்கன் விநியோகம் என புகார் வந்துள்ளது - தேர்தல் அதிகாரி

தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 26.29 சதவீத வாக்குகள் பதிவு

அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 28.33 சதவீத வாக்குகள் பதிவு

சென்னையில் 23.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன

வாக்குச் செலுத்திய அரசியல் கட்சித் தலைவர்கள்

தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் குடும்பத்தினருடன் வாக்களித்தார்

திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மேற்கு வேட்பாளருமான கே.என்.நேரு வாக்களித்தார்

ள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது வாக்கினை பதிவு செய்தார்

கூட்டுறவுத்துறை அமைச்சரும் மதுரை மேற்கு அதிமுக வேட்பாளருமான செல்லூர் ராஜூ வாக்களித்தார்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வாக்களித்தார்

துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் குடும்பத்தினருடன் வாக்களித்தார்

திமுக வேட்பாளரும் கைத்தறித்துறை அமைச்சருமான ஓ.எஸ். மணியன் வாக்களித்தார்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது வாக்கினை பதிவு செய்தார்

திண்டிவனம் தொகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது வாக்கைச் செலுத்தினார்

தொண்டாமுத்தூர் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி வாக்களித்தார்

திதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி வாக்களித்தார்

சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வாக்களித்தார்

ந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வாக்களித்தார்

சுற்றுச்சூழல்துறை அமைச்சரும் பவானி அதிமுக வேட்பாளருமான கே.சி. கருப்பண்ணன் வாக்களித்தார்

பால்வளத்துறை அமைச்சரும் ராஜபாளையம் அதிமுக வேட்பாளருமான ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடியில் தனது வாக்கினை செலுத்தினார்

மின்துறை அமைச்சரும் குமாரபாளையம் தொகுதி வேட்பாளருமான தங்கமணி குடும்பத்தினருடன் வாக்களித்தார்

ருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குடும்பத்தினருடன் வாக்களித்தார்

கவல் மற்றும் விளம்பரம் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தனது வாக்கினை பதிவு செய்தார்

போக்குவரத்துத்துறை அமைச்சருமான, அதிமுக வேட்பாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்களித்தார்

ரோட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது வாக்கினை செலுத்தினார்

ன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரம் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்

னத்துறை அமைச்சரும், திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளருமான திண்டுக்கல் சீனிவாசன் வாக்களித்தார்

பாமக மாநில தலைவரும், பென்னாகரம் தொகுதி வேட்பாளருமான ஜிகே மணி வாக்களித்தார்

பாலக்கோடு அதிமுக வேட்பாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி. அன்பழகன், சொந்தவூரான கெரகோடஅள்ளியில் வாக்களித்தார்

திமுக பொதுசெயலாளரும், எம்பியுமான வைகோ, தனது மகனுடன் வாக்கினை பதிவு செய்தார்

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தனது வாக்கினை பதிவு செய்தார்

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி வாக்களித்தார்

மிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ் அழகிரி தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்

மிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளன் தனது சொந்த ஊரில் வாக்களித்தார்

திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக எம்பியுமான ஆ.ராசா தனது சொந்தவூரான வேலூரில் வாக்களித்தார்.

திமுக எம்பி சிவா திருச்சியில் தனது வாக்கினை பதிவு செய்தார்

துரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி, தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்

ஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது வாக்கினை பதிவு செய்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments