25 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்க வலியுறுத்தி மகாராஷ்டிரா முதல்வர் பிரதமருக்கு கடிதம்

0 1532
25 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்க வலியுறுத்தி மகாராஷ்டிரா முதல்வர் பிரதமருக்கு கடிதம்

25 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டுமென மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், மத்திய அரசு கூடுதலாக 1 கோடியே 5 லட்ச டோஸ் மருந்துகளை தங்களது மாநிலத்துக்கு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

மும்பை, புனே, நாசிக், தானே உள்ளிட்ட 6 மாவட்டங்களில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்று வாரங்களுக்குள் தடுப்பூசி போட தயாராக இருப்பதாக தெரிவித்த அவர், ஏப்ரல் 4 வரை 76 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments