சிக்கிம் மாநிலத்தில் நிலநடுக்கம்..! ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு

சிக்கிம் மாநிலத்தில் நிலநடுக்கம்..! ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு
சிக்கிம் மாநிலத்தில் நேற்று இரவு 8 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தியா - பூடான் எல்லையில் ஏற்பட்ட நில அதிர்வு, ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவானதாக தேசிய பூகம்ப ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நில அதிர்வையடுத்து, மக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், இதுவரை கட்டிட பாதிப்புகளோ, உயிர்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. இதனிடையே அசாம், பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
Comments