புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு..! பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

0 1163
புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு..! பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான 30 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

உழவர்கரை, நெல்லித்தோப்பு தொகுதிகளில் 16 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மாநிலம் முழுவதும் 1,677 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,558 கன்ட்ரோல் யூனிட், 1558 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

உள்ளூர் போலீசாருடன் மத்தியப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர வாக்குச்சாவடிகள் தோறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் முழு அளவில் எடுக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments