எதிரிகளின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து கப்பல்களை காப்பாற்றும் நவீன சாஃப் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது டிஆர்டிஓ

0 1463

எதிரிகளின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து கடற்படை கப்பல்களை பாதுகாப்பதற்கான நவீன சாஃப் தொழில்நுட்பத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது. 

ஜோத்பூரிலுள்ள பாதுகாப்பு ஆய்வகம், வெற்றிகரமாக இதனை உருவாக்கியிருப்பது தற்சார்பு இந்தியாவை நோக்கிய மற்றுமொரு முக்கிய நகர்வாகும்.  குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட தூரம் என மூன்று ரகங்களில் தயாரான சாப் தொழில்நுட்ப ராக்கெட்டுகளில் இருந்து வெளிப்படும் உலோகங்கள், கப்பல்களை தாக்க வரும் எதிரிகளின் ஏவுகணைகளை திசை திருப்பி விடும்.

அரேபிய கடலில் இந்திய கடற்படை கப்பலில் இருந்து இந்த தொழில்நுட்பம் வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments