கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக ஏப்.8 ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

0 2421
கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி வரும் 8 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலவரம், உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை துரித்தப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், செவ்வாய்கிழமை, 11 மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments