நாளை வாக்குப்பதிவு.. தயார் நிலையில் தமிழகம்!

0 2449
நாளை வாக்குப்பதிவு.. தயார் நிலையில் தமிழகம்!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு, தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடைப்பெறும் என்றார். வாக்களிக்க வாக்காளர் விபர சீட்டு கட்டாயம் இல்லை என்ற அவர், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிம ம் உள்ளிட்ட 18 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் என்றார். 

தமிழகத்தில் உள்ள 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்களுக்காக 88 ஆயிரத்து 937 வாக்களிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதில் 537 மிகவும் பதற்றமானவை எனவும், 10 ஆயிரத்து 813 பதற்றமானவை என்றும் அவர் தெரிவித்தார். 

தேர்தல் பணியில், 4 லட்சத்து 17 ஆயிரத்து 521 பணியாளர்களும், பாதுகாப்பு பணியில் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 263 பேரும் ஈடுபட உள்ளதாக சத்ய பிரதா சாகு கூறினார். இதுவரை 1,31,389 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பணம் பறிமுதல் செய்யப்பட்ட தொகுதிகளில் தேர்தலை நிறுத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தான் இறுதி முடிவு எடுக்கும் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments