கொரோனா தொற்றுள்ளோர், தனிமைப்படுத்தப்பட்டோரின் வாக்குரிமையை மறுக்கக் கூடாது: சுனில் அரோரா

0 1947

கொரோனா தொற்றுள்ளோர், தனிமைப்படுத்தப்பட்டோரின் வாக்குரிமையை மறுக்கக் கூடாது எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவுறுத்தியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் அசாமில் 2 கோடியே 32 லட்சம் வாக்காளர்களும், மேற்கு வங்கத்தில் 7 கோடியே 34 லட்சம் வாக்காளர்களும் உள்ளதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 6 கோடியே 28 லட்சம் வாக்காளர்களும், கேரளத்தில் 2 கோடியே 67 லட்சம் வாக்காளர்களும், புதுச்சேரியில் 10 லட்சம் வாக்காளர்களும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவின் கடைசி ஒருமணி நேரத்தில் கொரோனா தொற்றுள்ளோர், தனிமைப்படுத்தப்பட்டோர் முழு உடல் கவசம் அணிந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments