குஞ்சுகளை காக்க பருந்தின் ரெக்கையை முறித்த வீரக்கோழி..! புழுதி பறக்க ஒரு சண்டை..!

0 5816
குஞ்சுகளை காக்க பருந்தின் ரெக்கையை முறித்த வீரக்கோழி..! புழுதி பறக்க ஒரு சண்டை..!

இரைத்தேடிக்கொண்டிருக்கும் போது கோழிக்குஞ்சுகளை தூக்கிச்செல்ல முயன்ற பருந்து ஒன்றை வீரமிக்க தாய்கோழி ஒன்று கால்களால் அடித்து ரெக்கையை முறித்து வீழ்த்திய பரபரப்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது

ஆசையாய் வளர்க்கும் கோழிகுஞ்சு கூட்டத்திற்குள் புகுந்து ஒற்றை கோழிக்குஞ்சை தூக்கிச்சென்ற கள்ள பருந்து ஒன்றை தென்மாவட்ட பேச்சு வழக்கில் மூதாட்டி எச்சரிக்கும் இந்த கர்ணன் படக் முன்னோட்டக் காட்சிக்கு பதில் சொல்வது போன்றதொரு நிஜ சம்பவத்தின் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

குஞ்சுகளுடன் இறைதேடிக் கொண்டிருக்கும் கோழியை மீறி அதன் குஞ்சுகளை வானில் இருந்து பறந்து வந்த பருந்து ஒன்று தூக்கிச்செல்ல முயல, அதனை ஆவேசமாக தாக்கியது ஒரு வீரமிக்க தாய்க்கோழி..!

புழுதிபறக்க நடந்த சண்டையின் இறுதியில் தனது குஞ்சுகளை தூக்கிச்செல்ல பாய்ந்து வந்த பருந்தை தன் கால்களுக்குள் வைத்து மிதித்து நசுக்கி முடிவு கட்டியது அந்த பாசமிக்க தாய்க்கோழி..!

அந்த தாய்கோழியின் ஆவேச கொக்கரிப்புக்கு பின் வேறு யாராவது இருக்கிறீர்களா ? என்று கேள்வி எழுப்புவது போல இருந்தது. தூக்கப்பார்த்த பறந்தை அடித்து படுக்க வைக்க, சண்டைக் சேவல்தான் வர வேண்டும் என்றில்லை பாசமிக்க தாய்க்கோழியே போதும்..!

எந்த ஒரு உயிருக்கும் தாயை விட ஒரு பாதுகாப்பு அரண் உண்டோ ? என்று கேட்க வைத்திருக்கும் இந்த அதிரடி காட்சிகள் எங்கு படமாக்கப்பட்டவை என்ற தகவல் வெளியாகாவிட்டாலும், இணையத்தில் தாயின் வீரத்தை பறைசாற்றும் சாட்சியாக வலம் வருகின்றது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments