பீகாரில் கொரோனா பரவலை தடுக்க கல்வி நிலையத்தை மூடியதற்கு கடும் எதிர்ப்பு... காவல்துறையினர் மீது மாணவர்கள் கல்வீச்சு

0 591

பீகாரில் சசாரம் என்னுமிடத்தில் கொரோனா தடுப்பு விதிகளின்படி பயிற்சி மையத்தை மூடியதைக் கண்டித்துக் காவல்துறையினர் மீது மாணவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர்.

கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதையடுத்துப் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதேபோல் போட்டித் தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பீகாரின் சசாரம் என்னுமிடத்தில் உள்ள ஒரு பயிற்சி மையத்தை நகராட்சிகள் காவல் துறையினரின் உதவியுடன் மூடினர்.

இதைக் கண்டித்துக் காவல்துறையினர் மீது மாணவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடமே போர்க்களம்போல் காட்சியளித்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments