மே.வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தும் பா.ஜ.க..! 10 பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்க ஏற்பாடு

0 1760

மேற்கு வங்க மாநிலத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மாநில பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் கைலாஷ் விஜய் வர்கியா, மேற்கு வங்கத்தில் அடுத்து நடைபெற உள்ள 5 கட்ட தேர்தலில் பா.ஜ.க தீவிரமாக ஈடுபட உள்ளது என்றார்.

மேற்கு வங்கத்தில் இதுவரை 9 கூட்டங்களில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டதாகவும், மேலும் 10 கூட்டங்களில் பங்கேற்க உள்ளதாகவும் அவர் கூறினார். இம்மாதம் 27 ஆம் தேதி வரை பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் பிரசாரம் மேற்கொள்வார் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments