மும்பையில் கொரோனா பரவலை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

மும்பையில் கொரோனா பரவலை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரவு 8 மணி முதல் அமலுக்கு வரும் இந்த உத்தரவு வரும் 30 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி, பொது இடங்களில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான வார நாட்களில் காலை 7 மணி முதல் 8 மணி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தேவையின்றி மக்கள் யாரும் வெளியே நடமாடக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments