லா பெரோஸ் போர் பயிற்சி.... இந்தியா உள்பட 5 நாடுகள் பங்கேற்பு

அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கடற்படையுடன், இந்திய கடற்படையும் இணைந்து மேற்கொள்ளும் லா பெரோஸ் ( La Perouse )என்ற போர் பயிற்சி தொடங்கி உள்ளது.
இந்திய கடற்படையை சேர்ந்த ஐஎன்எஸ் சாத்புரா, ஐஎன்ஸ் கில்டன் ஆகிய இரண்டு கப்பல்கள் முதன்முறையாக இந்த பயிற்சியில் பங்கேற்கின்றன. அவற்றுடன் பி 81 கண்காணிப்பு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் கலந்து கொள்கின்றன.
இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் இன்று முதல் 3 நாட்கள் போர் பயிற்சி நடைபெறுகிறது. கடலின் மேற்பரப்பில் இருந்து மற்றும் விமானம் மூலம் நடத்தப்படும் தாக்குதலை தடுப்பது, தந்திரமான தாக்குதல் முறைகள், ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த பயிற்சியில் இடம்பெறுகின்றன.
Comments