உளவுத்துறை தோல்வி காரணம் இல்லை என்றால்... அதன் அர்த்தம் என்ன? மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் குறித்து ராகுல் காந்தி கருத்து

0 1354

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளுடனான மோதலில் 22 வீரர்கள் கொல்லப்பட நேர்ந்த சூழலுக்கு, உளவுத்துறையின் தோல்வி காரணம் இல்லை என்றால், முறையாகத் திட்டமிடப்படவில்லை என்று அர்த்தமாகி விடும் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

சத்தீஸ்கர் சம்பவத்திற்கு உளவுத்துறை தோல்வியோ அல்லது மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஏற்பட்ட தோல்வியோ காரணம் அல்ல, என சிஆர்பிஎஃப் டிஜி குல்தீப் சிங் கூறியிருந்தார். இதைச் சுட்டிக்காட்டியுள்ள ராகுல்காந்தி, உளவுத்துறை தோல்வி இல்லை எனக் கூறும்பட்சத்தில், இரு தரப்பிலும் உயிரிழப்புகள் சமமாக இருக்கின்றன என்றால், நடவடிக்கை முறையாகத் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்படவில்லை என்றே அர்த்தமாகும் எனக் கூறியுள்ளார்.

இஷ்டத்திற்கு பலி கொடுக்க நமது வீரர்கள் ஒன்றும் போருக்கான பலி ஆடுகள் அல்ல என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments