உத்தரக்கண்ட் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் இந்திய விமானப்படை தீவிரம்..!

0 705
உத்தரக்கண்ட் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் இந்திய விமானப்படை தீவிரம்..!

த்தரக்கண்ட் மாநிலம் தேரி என்னுமிடத்தில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

காட்டுத் தீயால் பல நூறு எக்டேர் பரப்பில் மரங்கள், செடிகொடிகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. தீயில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் காட்டுத் தீயை அணைக்க ஹெலிகாப்டர்களையும் அனுப்பி வைப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார்.

அதன்படி ஐயாயிரம் லிட்டர் கொள்ளளவுடைய தொட்டியைக் கொண்ட இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் தேரி என்னுமிடத்தில் உள்ள ஏரியில் இருந்து நீரை எடுத்துச் சென்று தீப்பற்றிய இடங்களில் தெளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments